போத்தனூர்;கற்பகம் பல்கலை., வளாகத்தில் இன்ஜி., கல்லூரியின், 16, 17வது பட்டமளிப்பு விழா, கற்பகம் கல்வி குழும தலைவர் வசந்தகுமார் தலைமையில் நடந்தது. விழாவில் சென்னை ஐ.ஐ.டி.,இயக்குனர் காமகோடி பேசுகையில், ''மக்களை வரும் காலங்களில் பெரும் தொற்று, இயற்கை பேரழிவு போன்றவற்றிலிருந்து காக்க. அறிவியலும், தொழில்நுட்பமும் அவசியம். அதற்கேற்ப இளைஞர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற, 1,800 பேருக்கு பட்ட சான்றிதழ்களை இயக்குனர், கல்விக்குழும தலைவர் உள்ளிட்டோர் வழங்கினர். கல்வி குழும அறங்காவலர் தமயந்தி, முதன்மை செயல் அலுவலர் முருகையா, இன்ஜி., கல்லூரி முதல்வர் விஜயகுமார், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.