போலீஸ் செய்திகள் | மதுரை செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 

சலவை தொழிலாளி பலி

மேலுார்: கீழையூர் செல்வம் 30. சலவை தொழில் செய்தார். நேற்று காலை கீழையூர் - அட்டப்பட்டி ரோட்டில் தனியார் கிரானைட் கல் குவாரி பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்ற போது வலிப்பு ஏற்பட்டு மூழ்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.



6 பிள்ளைகள் இருந்தும் தம்பதி தற்கொலை

மேலுார்: நாகலிங்கபுரம் முத்தையா 90, மனைவி ராக்கு 70. இரு மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். திருமணமாகி தனியே வசிக்கின்றனர். தம்பதி இருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பராமரிக்க ஆள் இல்லாததால் இம்முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகையிலை தந்தை, மகன் கைது
உசிலம்பட்டி: எஸ்.ஐ., அருண்குமார் மற்றும் போலீசார் வத்தலக்குண்டு ரோட்டில் ரோந்து சென்ற போது ரயில்வே கேட் அருகில் உள்ள அக்கினி கடையில் 10.800 கிலோ கிராம் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். கஞ்சா மற்றும் ரூ.2000ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். அக்கினி 61, மகன் வீரபுத்திரனை 35, கைது செய்தனர்.

ஆன்லைன் லாட்டரி; இருவர் கைது
அலங்காநல்லுார்: எஸ்.பி. சிவபிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு அலங்காநல்லுார் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. மேலச் சின்னனம்பட்டி மற்றும் கொண்டையம்பட்டியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட செல்லத்துரை 63, கிருஷ்ணனை 48, கைது செய்து ரூ.2210ஐ பறிமுதல் செய்தனர்.

எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
வாடிப்பட்டி: சமயநல்லுார் டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகுமார், வெங்கடேசன், மணிகண்டன் மற்றும் போலீசார் நாகமலைபுதுக்கோட்டை துவரிமான் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். டூவீலரில் 8 கிலோ கஞ்சாவுடன் சென்ற புல்லுாத்து சந்திரசேகரை 38, கைது செய்து கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
சோழவந்தான்: இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் ராதாகிருஷ்ணன், பவுன்பாண்டியன் கச்சிராயிருப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அப்பகுதி குணசீலன் மகன் அஜித்தை 22, கைது செய்தனர். ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது
சோழவந்தான் : சோழவந்தான் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலக்கால் பஸ் ஸ்டாப் அருகே மினி சரக்கு வேனில் ஏற்றி செல்லப்பட்ட தலா 40 கிலோ எடையுள்ள 17 மூடைகளில் இருந்த ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். மதுரை காமராஜ் சாலை சுந்தரபாண்டி 37, டிரைவர் குமார் 36, லோடு மேன்கள் மேலஅனுப்பானடி அருண்பாண்டியன் 22, சிந்தாமணி பாண்டிகுமாரை 34, போலீசார் கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X