மதுரையில் தடுப்பூசி செலுத்தியவர்களையும் தொட்டு பார்க்குது கோவிட்
Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை: மதுரையில் நேற்று 12 பேர் புதிதாக உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வீட்டுத் தனிமையில் இருந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தினமும் 10 பேருக்காவது கொரோனா தொற்று ஏற்படுகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 103 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 12 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போதுள்ள 103 பேரில் 25 சதவீதம் பேர் கிராமத்தில் உள்ளவர்கள். 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் மீதியுள்ளோர் வீட்டுத்தனிமையிலும் சிகிச்சை பெறுகின்றனர். உள்ளூர் மக்கள் மூலமே பரவி வருவதால் தொற்றின் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது.

அரசு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார மையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மூலம் தினமும் 400 முதல் 450 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்படுகிறது. சராசரியாக தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஜூன் 2வது ஞாயிறில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 12 முதல் 15, 15 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அலுவலக வேலை நாட்களில் 2000 பேர் வரை தடுப்பூசி செலுத்துகின்றனர். ஞாயிறுகளில் கூட்டம் குறைகிறது.





ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரையும் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் 24 மணி நேர தடுப்பூசி முகாம் செயல்படுகிறது. அனைத்து தரப்பினருக்குமான 2 லட்சத்து 78ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதால் முகாமில் பயன்பெறுமாறு டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஜூன்-202210:49:12 IST Report Abuse
அம்பி ஐயர் கையாலாகாத அரசு இயந்திரம்... வருமுன் காக்கும் திட்டமும் இல்லை.. வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.. இதைப் பயன்படுத்தி எப்புடிக் கொள்ளையடிக்கலாம்?? த்தனை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வாங்கின மாதிரி லைசால் வாங்கியது போல கொள்ளையடிக்கலாம் என்று தான் சிந்தனை.. விடியா மூஞ்சி அரசு....
Rate this:
Cancel
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202209:32:29 IST Report Abuse
sunny raja தேவை முகமூடி. தேவை முகமூடி. தேவை முகமூடி. வேறு வழியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X