'3 டிரில்லியன்' டாலரை தொட்ட இந்தியா: மத்திய அமைச்சர் கோயல் பெருமிதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'3 டிரில்லியன்' டாலரை தொட்ட இந்தியா: மத்திய அமைச்சர் கோயல் பெருமிதம்
Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
 

கோவை: ''சர்வதேச அளவில், மூன்று டிரில்லியன் டாலர் (236 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தோடு நம்நாடு உயர்ந்து நிற்கிறது,'' என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.latest tamil newsஇந்திய தொழில் கூட்டமைப்பு கோவை (சி.ஐ.ஐ.,), மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, 'இன்வெஸ்ட் இந்தியா' ஆகியவை இணைந்து தொழில் நிறுவன அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், பியுஷ் கோயல் பேசியதாவது:

நம் நாட்டில் டிஜிட்டல் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் விருப்பப்படி விற்பனையாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது. இணையவழி இயங்குதளங்கள் கட்டுப்பாடானவை. அவை வணிக நிறுவனங்கள், நுகர்வோர் இடையே பாலமாக விளங்குகிறது. டிஜிட்டல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள நல்ல வாய்ப்புகளைப் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


வெளிப்படை நிர்வாகம்நம் நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. நாட்டின் பொருளாதாரம் தற்போது 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக (236 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. மிகுந்த நம்பகத்தன்மையுடைய தலைமை மற்றும் ஜனநாயக கட்டமைப்புடன் நம் நாடு திகழ்கிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் உயர்ந்து வருகிறது.அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தை, மத்திய அரசு ஆதரிக்கிறது. நிலையான கொள்கை வாயிலாக, நல்ல ஸ்திரமான கட்டமைப்பு உருவாகி வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களின் முதலீட்டையும் மதித்து வருவதால், ஜவுளி, பொறியியல் உள்ளிட்ட துறைகள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக அமைச்சக இணைச் செயலர் ராஜேந்திர ரத்னு, ஜவுளி அமைச்சக சிறப்புச் செயலாளர் வி.கே.சிங் ஆகியோர் தொழில்துறை நலனுக்காக அந்தந்த அமைச்சகங்களால் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினர்.மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் முருகன், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) துணைத் தலைவர் கமல் பாலி, தமிழக தலைவர் சங்கர் வாணவராயர் மற்றும் கோவை தலைவர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X