விமான நிலையத்தில் பனை மரம் வடிவில் தூண்கள்
Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் நவீன சர்வதேச முனைய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள துாண்கள் பனை மரம் போல வடிவமைக்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது.மொத்தம், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையம் வாயிலாக, ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணியரின் எண்ணிக்கை, 1.7 கோடியிலிருந்து, 3.5 கோடியாக அதிகரிக்கும்.



latest tamil news



இந்த புதிய முனையத்தில், கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான, வழக்கமான நடைமுறைகள்; இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன. அவ்வாறு கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், பனை மரம் போல துாண்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச நவீன முனையம் ஐந்து தளங்களில் அமைகிறது. இதில், புறப்பாடு பயணியருக்கான இரண்டாவது தளத்திலும், முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தளத்திலும் உள்ள துாண்களும் பனைமரம் போல் வடிவமைக்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றன.

இதற்காக, கட்டட துாண்கள் வடிவமைக்கும் போது, 'மரம் வடிவில் துாண்கள்' என்ற பிரிவு தனியாக உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை குறிக்கும் வகையில் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது. இதன் படி, எட்டு துாண்கள் பனை மரம் போல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு துாண்களின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-ஜூன்-202211:09:16 IST Report Abuse
அம்பி ஐயர் இப்போதெல்லாம் கண்ணாடி கூரை இடிஞ்சு விழவில்லையே ஏன்???
Rate this:
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
28-ஜூன்-202210:45:37 IST Report Abuse
Nanthakumar.V இருக்குற மரத்த எல்லாம் வெட்டி காலி பண்ணிட்டு இப்படி டிசைன் பண்ணிக்க வேண்டியது . பசங்க கிட்ட பண மரம் இப்படிதா இருக்கும் டா சொல்லிக்க வேண்டியது.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
28-ஜூன்-202207:37:51 IST Report Abuse
தமிழன் அதெல்லாம் இருக்கட்டும். கண்ணாடி ஒடஞ்சு விழுமா விழாதா?
Rate this:
Neutral Umpire - Chennai ,இந்தியா
28-ஜூன்-202208:59:05 IST Report Abuse
Neutral Umpireஉடைஞ்சா விழும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X