தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல்: வேட்பு மனுதாக்கல் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல்: வேட்பு மனுதாக்கல்
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., வில் ஒன்றிய பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், தி.மு.க., வில் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி தெற்கு மாவட்டமாகவும், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி வடக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஒன்றிய செயலாளர், அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஒன்றிய பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் ஆணையாளர்களாக சுகுமாரன், சேகர், மலர்மன்னன், சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களை கட்சி நிர்வாகிகள் பெற்று, அதை பூர்த்தி செய்து தாங்கள் விரும்பும் பதவிக்கு வேட்பு மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனை வழங்க கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு வந்தார்.அப்போது தி.மு.க., தெற்கு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 12 ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு, போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்களது வேட்பு மனுவை அமைச்சர் வேலுவிடம் அளித்தனர். மனுக்களைப் பெற்ற அவர், ஆலோசனை வழங்கினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X