பீங்கான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை நிறுத்தம்; கிராமப்புற மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உள்ள அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாமாண்டு சேர்க்கை நிறுத்தப்பட்டதால், கிராமப்புற மாணவர்களின் சுயதொழில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில், முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில் செராமிக் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது.

அதில், 44 ஏக்கரில் கற்குழாய் தொழிற்சாலை, செராமிக் கலைப் பொருட்கள் தயாரிப்புக் கூடம், செராமிக் மூலப்பொருட்கள் விற்பனை நிலையம், கில்லன் ஆகிய பிரிவுகளும், 56 ஏக்கரில் 61 செராமிக் தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டன.இந்த தொழிலை விரிவுபடுத்தும் வகையில், 1962ம் ஆண்டு முதல், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரி துவங்கப்பட்டது. துவக்கத்தில் ஆண்டுக்கு 25 மாணவர்கள் வீதம் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்க்கப்பட்டு, செராமிக் கலைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து கற்றறிந்து, வெளிநாடுகளிலும், உள்ளூரிலும் சுயமாக வேலைவாய்ப்பு பெற்றனர். மேலும் பலர் அரசு வேலையில் சேர்ந்து உயர் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.பத்தாம் வகுப்பு முடித்ததும், பீங்கான் கல்லுாரியில் முதலாமாண்டில் சேர முடியும்.

இதனால், 2012ம் ஆண்டில் இருந்து, மாணவர் சேர்க்கை இருமடங்கானது. தமிழகத்தில் விருத்தாசலத்தில் மட்டுமே தொழிற்பேட்டையும், பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியும் இயங்குவது சிறப்பு வாய்ந்தது.இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து, வேலைவாய்ப்புகளை பெற்று வந்தனர். கல்லுாரி துவங்கியது முதல், கடந்த கல்வியாண்டு வரை, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பீங்கான் கல்லுாரியில் முதலாமாண்டுக்கு மாணவர் சேர்க்கை துவங்கி இருக்க வேண்டும். ஆனால், முதலாமாண்டுக்கு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவித்துள்ளதால், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும் என கிராமப்புற மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் திருமுருகனிடம் கேட்டபோது, 'உயர் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவில்லை. இன்று விடுமுறை, மருத்துவமனையில் இருக்கிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி கூறுகையில், 'விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்ததும், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியில் சேர்ந்து, சுயதொழில் வாய்ப்பை பெற்று வந்தனர். இதனால், வறுமை காரணமாக பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க முடியாமல் பாதியில் படிப்பை கைவிடும் நிலையும் தவிர்க்கப்பட்டது.

குறைந்த கட்டணத்தில் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையில் இருந்த மாணவர்களுக்கு, தற்போது முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தம் என கல்லுாரியில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை துவக்கி, கல்லுாரியை தொடர்ந்து நடந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து தமிழக முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காங்., தலைவர் அழகிரி, தொகுதி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம்' என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X