அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்களுக்கு வலை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்களுக்கு வலை
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
Latest district News

சங்கராபுரம் அருகே அரசு டவுன் பஸ் நிற்காததால், கல் வீசி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய பள்ளி மாணவர்களை, போலீசார் தேடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு டெப்போவிலிருந்து, முக்கனுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. கிடங்கன் பாண்டலம் பஸ் நிறுத்தத்தில், அந்த பஸ்சில் பள்ளி மாணவ - மாணவியர் அதிகமாக ஏறுவர். தினமும் காலை, 9:00 மணிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ், முறையாக பஸ் நிறுத்தத்தில் நின்று மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால், மாணவ - மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

நேற்று காலை ஏராளமான மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்த நிலையில், பஸ் நிற்காமல் சென்றது. ஆத்திரமடைந்த மாணவர்கள், பஸ்சின் பின் பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.அதிர்ஷ்டவசமாக பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்டக்டர் பாலகிருஷ்ணன் புகாரின் படி, சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, பஸ் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்களைத் தேடுகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X