இந்த போட்டோவில் மேயர் இருக்கையின் மேல் முதல்வர் ஸ்டாலின் படமும், உதயநிதி படமும் மட்டுமே இருந்தது. கருணாநிதி படம் ஒரு மூலையில் சிறிய மாலை அணிவிக்கப்பட்டு யார் கண்ணுக்கும் படாத மாதிரி இருந்தது. இதனால் மேயர் அலுவலகத்திற்கு வந்த மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்தனர்.
ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி தான் கட்சியில் எல்லாம் என்பதற்காக, அவருக்கு ஐஸ் வைப்பதற்காக, கருணாநிதி படத்தை தனது மேஜைக்கு மேல் இல்லாமல் மேயர் பார்த்துக்கிட்டது ரெம்ப ஓவராக இருக்குனு பலரும் புலம்பியபடி சென்றனர்.
அதை சமயம் மேயருக்கு நேர்மாறாக, துணை மேயர் அஞ்சுகம் தனது மேஜையில், கருணாநிதி, ஈ.வே.ரா., அண்ணாதுரை, ஸ்டாலின் படமும் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார்.