சென்னை: பிளஸ் 1 பொது தேர்வில் அரசு பள்ளிகளில், பெரம்பலுார், கன்னியாகுமரி மாவட்டங்கள், 92 சதவீத தேர்ச்சியுடன் முன்னிலை இடம் பெற்றுள்ளன.
பிளஸ் 1 பொது தேர்வில், மாவட்ட அளவில், அரசு பள்ளிகளில் பெரம்பலுார் 92.43; கன்னியாகுமரி 92.41; மதுரை 91.06; ராமநாதபுரம் 90.10 சதவீதம் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளன.செங்கல்பட்டு 78.85; திருவாரூர் 78.70; திருவண்ணாமலை 78.64; கிருஷ்ணகிரி 77.38; திண்டுக்கல் 75.73; மயிலாடுதுறை 74.19; வேலுார் 71.84 சதவீதம் என, மேற்கண்ட ஏழு மாவட்டங்களும், 80 சதவீதத்துக்கு குறைவான தேர்ச்சியை பெற்றுள்ளன.
ஒட்டுமொத்த பள்ளிகளின் தேர்ச்சியில் மட்டுமின்றி, அரசு பள்ளிகளின் செயல்பாட்டிலும், வேலுார் பின்தங்கியுள்ளது.இந்திய தென் மாநிலங்களில் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும், திருநெல்வேலி மாவட்டம், அரசு பள்ளி தேர்ச்சியில் பின்தங்கி, 86.10 சதவீதமே பெற்றுள்ளது.நிர்வாக ரீதியான பள்ளிகளில், பிற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டு செயல்படும் ஓரியன்டல் பள்ளிகள், 99.47 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளன.
மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மட்டும் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 99.42 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள் 99.35 சதவீதம்; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 99.02 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.பகுதி உதவி பெறும் பள்ளிகள் 95.03; சமூக பாதுகாப்பு 92.86; அரசு உதவி பள்ளிகள் 91.65; ஹிந்து அறநிலையத் துறை 90.11; கள்ளர் 90.21; வனத்துறை 87.15; நகராட்சி 83.43; அரசு பள்ளிகள் 83.27 சதவீதம்; மாநகராட்சி பள்ளிகள் 82.41; பழங்குடியினர் பள்ளிகள் 82.10; ஆதி திராவிட பள்ளிகள் 75.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.