மாணவர்கள், https://admissionsatpgschool.tnau.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆக., 8ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். இளங்கலை, முதுகலை முடித்த மாணவர்கள், புரவிஷனல் சான்றிதழ்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், பல்கலை, பதிவாளர் அல்லது கல்லுாரி முதல்வர்களிடம் பெற்ற கோர்ஸ் கம்ப்ளீஷன் சான்றிதழ் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் சேர்க்கையின் போது, பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, pgadmission@tnau.ac.in என்ற இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம். மேலும், 94890 56710 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கு ஆக., 27ல் நுழைவுத் தேர்வு நடக்கும். அதற்கு முன், ஆக., 26ல் மாதிரி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். செப்., இரண்டாவது வாரம் மாணவர் சேர்க்கை முடிந்து, அக்., முதல் வாரம் வகுப்புகள் துவங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.