தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றங்களை தடுக்கும் வகையில், சேலம் இன்ஸ்பெக்டர், மதுரை எஸ்.ஐ.,க்கு, புதிய தொழில்நுட்ப குற்றங்கள் குறித்து, ஹைதராபாத்தில் மூன்று நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி, சைபர் க்ரைம் குற்றங்களை தடுக்கும் வகையில், மாநகரங்களில் மட்டுமே இயங்கி வந்த சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன், தற்போது மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தபட்டுள்ளது.
சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன் படுத்த
துவங்கி உள்ளனர்.
அதை தடுக்கும் வகையில், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகர சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர்
சந்தோஸ்குமார், மதுரை மாவட்டம் சமயநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, நேற்று ைஹதராபாத்தில் துவங்கிய, மூன்று நாள் சிறப்பு பயிற்சியில் பங்கேற்றனர்.
இவர்களை தொடர்ந்து மாவட்ட, மாநகர சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கு சிறப்பு பயிற்சி, ைஹதராபாத், திருவனந்தபுரம், கொல்கத்தா ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளதாக போலீசார்
தெரிவித்தனர்.