மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீயால் கடும் பாதிப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீயால் கடும் பாதிப்பு
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
Latest district News

ராஜபாளையம்:ராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயால் வன விலங்குகளுக்கும், அரிய வகை மூலிகைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகம் அய்யனார் கோவில், நீராவி, வாளைகுளம் ராஜாம்பாறை உட்பட ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காட்டெருமை, புலி, யானை, மான் என பல்வேறு விலங்குகள் உள்ளன. நீராவி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீ பற்றியது. மலையின் பல இடங்களில் ஆங்காங்கு தீ எரிந்து வருகிறது.
அந்த தீ, தற்போது பலத்த காற்றால் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி அரிய புல்வகைகள், மூலிகை செடிகள், மரங்கள், வன விலங்குகள் தீயில் பாதிக்கப்படுகின்றன.வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த, முதற்கட்டமாக தீ தடுப்பு, வனக்காவலர்கள் அடங்கிய ஆறு பேர் குழுவினர் சென்றுள்ளனர்.மேலும் தீ பரவாமல் தடுக்க, தொடர்ந்து அதிகமான நபர்களை அனுப்பி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X