ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில்ரூ.4.28 லட்சம், 9 சவரன் கொள்ளை | சேலம் செய்திகள் | Dinamalar
ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில்ரூ.4.28 லட்சம், 9 சவரன் கொள்ளை
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
Latest district News

ஆத்துார்:ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில், 4.28 லட்சம் ரூபாய், 9 சவரன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றது குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நத்தக்கரை, வெல்கம் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நித்யா, 29. இவர், ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கணவர் கார்த்திகேயன், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.இரு மாதங்களுக்கு முன், சொந்த ஊர் வந்த அவர், வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு விட்டு, நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் மஸ்கட் நாட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு நித்யா பணிக்கு சென்றுஉள்ளார். மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.வீட்டினுள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்களால் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த, 3.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 9 சவரன் நகை, 4.28 லட்சம் ரூபாய், வெள்ளி விளக்கு, குழந்தை கொலுசு உள்பட 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.நித்யா அளித்த புகாரின்படி, தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X