நாய் தொல்லை அதிகரிப்பு: சிட்கோ நகர் மக்கள் பீதி | சென்னை செய்திகள் | Dinamalar
நாய் தொல்லை அதிகரிப்பு: சிட்கோ நகர் மக்கள் பீதி
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 

அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதற்கு, சென்னை மாநகராட்சி தான் காரணம்.

பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடுப்பு செய்து, அதே பகுதிகளில் விடாமல், இபோன்ற பகுதிகளில் விட்டு செல்கின்றனர். இதனால் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த நாய்கள் வாகன ஓட்டிகள், பாதசாரிகளை விரட்டுவதும், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு பொதுமக்களை கடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டுவதால், அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து சம்பந்தப்பட்ட பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X