டிப்பர் லாரி மோதி இறந்தவர்மனைவிக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை, டிப்பர் லாரி மோதி உயிரிழந்த நபரின் மனைவிக்கு, 35.56 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் கார்த்திக், 52; தனியார் நிறுவன ஊழியர். இவர், 2020 மே மாதம், தன் இரு சக்கர வாகனத்தில், தாம்பரம் நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி, கார்த்திக்கின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.இந்நிலையில், கார்த்திக்கின் மனைவி லதா 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகரன் முன் நடந்தது.விசாரணையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:டிப்பர் லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே, விபத்துக்கு காரணம் என்பது உறுதியானது.இதையடுத்து, இறந்தவரின் மனைவிக்கு, 35.56 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், லாரி உரிமையாளர், இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இணைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X