மனைவி, மாமியார் கொலை வியாபாரிக்கு இரட்டை 'ஆயுள்' | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மனைவி, மாமியார் கொலை வியாபாரிக்கு இரட்டை 'ஆயுள்'
Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
 

ஸ்ரீவில்லிபுத்துார்:துாங்கும் போது பெட்ரோல் ஊற்றி மனைவி மற்றும் மாமியாரை எரித்துக் கொன்ற கணவருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பழ வியாபாரி முருகபாண்டி, 42. மனைவி முத்துலட்சுமி, 34. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, மனைவியின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சாரதா நகரில் இருவரும் குடியேறினர்.அங்கு மனைவி நடத்தையில் முருகபாண்டி சந்தேகமுற்றார். கடந்த, 2009 ஜூன், 14 இரவில், தாய் கமலாவுடன், முத்துலட்சுமி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முருகபாண்டி, இருவரையும் கொலை செய்தார்.
திருத்தங்கல் போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X