குன்னுார்:குன்னுாரில் உள்ள, தேயிலை வாரியத்தில் புதிதாக பொறுப்பேற்ற செயல் இயக்குனர் முத்துகுமார் முன்னிலையில், பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அதில், முக்கிய கோரிக்கையாக, 'டீ மார்க்கெட்டிங் கன்ட்ரோல் ஆர்டர் 30 ஏ' அடிப்படையில், உற்பத்தியாளர்களுக்கு மாதாந்திர விலை அறிவிப்பை பின்பற்ற உத்தரவு இடப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஏலதாரர்கள், வர்த்தகர்கள், புரோக்கர்கள் பின்பற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.மலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,''தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகளின் சூழ்நிலையை கருதி அடையாள வேலை நிறுத்தம் செய்தோம். ஒரு வாரத்திற்குள், விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணப்படும் என, தேயிலை வாரிய செயல் இயக்குனர் உறுதியளித்துள்ளார். இதனால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.