மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் அடையாள அட்டை | நீலகிரி செய்திகள் | Dinamalar
மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் அடையாள அட்டை
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டி:'நீலகிரி மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது.கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள், 25 பேருக்கு, தலா, 6,840 ரூபாய் வீதம், 1.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.மேலும், 'இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 48 ஆயிரத்து, 480 ரூபாய் மதிப்பிலான 'ஆவாஸ்' கையடக்க கணினி, மூன்றுபேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை,' என, 32 பயனாளிகளுக்கு 2.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற உதவிய தொண்டுநிறுவன பணியாளர்கள், 30 பேருக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் அம்ரித் பேசுகையில்,''மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். மாவட்டத்தில், 5,500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் அட்டை வழங்கப்படும்,'' என்றார். இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் மலர்விழி மற்றும் மாவட்ட தொழில் மையபொது மேலாளர் சண்முகசிவா மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X