வாய்ப்பாடு வழங்கும் நிகழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வாய்ப்பாடு மற்றும் ஆங்கில இலக்கண புத்தகம் வழங்குவதை, அவிாநசியை சேர்ந்த வடிவேல் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று, அவிநாசி புனித தோமையார் துவக்கப்பள்ளியில், வாய்ப்பாடு மற்றும் ஆங்கில இலக்கண புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் சுமதி, பங்கேற்றார். இதில் ஸ்ரீகண்டன், சதீஷ்குமார், சையது, முத்துக்குமார் பங்கேற்றனர். ரவிக்குமார் நன்றி கூறினார்.105 கிலோ கஞ்சா பறிமுதல் கடந்த மார்ச் 28 முதல் ரயில்களில் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா, குறித்து கண்காணிக்க குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவ்வகையில், திருப்பூர் வழியே செல்லும் ரயில்களின் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை வீசி விட்டு, வடமாநிலத்தவர் ஓட்டம் பிடிக்கும் சம்பவங்கள் நடந்தன. ஏழு பேர் பிடிபட்டு கோர்ட் உத்தரவின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டனர்.திருப்பூர் ரயில்வே போலீசார், ஏப்., முதல் ஜூலை 20 ம் தேதி வரையிலான கடந்த இரண்டரை மாதங்களில், 105 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு, எட்டு லட்சம் ரூபாய்.நகராட்சி உடனடி நடவடிக்கைபல்லடம், அண்ணா நகரில், நீர் ஆதார குட்டை உள்ளது. அருகிலுள்ள இடத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். மழை காலங்களில், குட்டை நிரம்பி வழிந்து, குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதுடன், விஷ ஜந்துக்களும் அச்சுறுத்தி வருகின்றன. குட்டையை துார்வார வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இதனால், த.ம.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதையறிந்த, நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக, துார்வாரும் பணிகளை துவக்கினர்.மாம்பழ சீசன் முடிகிறதுசித்திரை மாதத்தில் துவங்கிய மாம்பழ சீசன் ஆடி மாதம் வரை நீடிக்கிறது. இந்த ஆண்டு சித்திரை இறுதியில்தான் சீசன் துவங்கியது. விளைச்சலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கிராக்கி நிலவும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மாம்பழ விலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பழுக்க வைக்கவும், மாம்பழங்கள் அழுகி வீணாவதை தடுக்கவும் வியாபாரிகள் கார்பைட் கல் மூலம் தேவையான நேரத்தில், தேவையான அளவு மட்டுமே பழுக்க வைக்கின்றனர். இதை சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால், மாம்பழம் சாப்பிடுவதை பலர் குறைத்துக் கொண்டனர். விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு முடிவுகட்ட முடியும்.சென்னை அணி முதலிடம்மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டிகள், அவிநாசியில் நடந்தது. இதில், சப்-ஜூனியர் பிரிவில், சென்னை மண்டலம் முதலிடம், சேலம் 2ம் இடம், சீனியர் பிரிவில் சென்னை முதலிடம், கோவை 2ம் இடமும் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் சேலம் முதல் இடத்தையும், நாமக்கல் 2ம் இடத்தையும், சென்னை 3-ம் இடத்தையும் பிடித்தது. மாநில வலுதுாக்கும் சங்க செயலாளர் நாகராஜ், நிர்வாக செயலாளர் ஆறுமுகம், இணை தலைவர் பொன்சடையன், செயலாளர் லோகநாதன், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் பேசினர். அவெற்றி பெற்ற அணிகளுக்கு, அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பரிசுகளை வழங்கினார்.தி.மு.க., பொதுக்கூட்டம் தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நேற்று நடந்தது. தி.மு.க., மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ் தலைமைவகித்தார். கவுன்சிலர் முத்து வரவேற்றார். பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க.,வின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தி.மு.க,, தெற்கு மாநகர பொறுப்பாளர் நாகராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னாள் மாணவர் பேரவை (படம்)தெக்கலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் பேரவை தொடக்க விழா, ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா மற்றும் மரம் நடு விழா என, முப்பெரும் விழா நடந்தன. தலைமையாசிரியர் கருப்பையா, தலைமை வகித்தார். கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் ராசப்பன், பி.டி.ஏ., தலைவர் கந்தசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வேலுமணி, மூத்த ஆசிரியர்கள், ஊர் பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். மூத்த ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள், கவுரவிக்கப்பட்டனர்.தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நேற்று நடந்தது. தி.மு.க., மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ் தலைமைவகித்தார். கவுன்சிலர் முத்து வரவேற்றார். பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க.,வின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தி.மு.க,, தெற்கு மாநகர பொறுப்பாளர் நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.