அண்ணா சிலைக்கு போகாதுலட்சுமி மில்ஸில் இறங்குங்க!பாதி வழியில் இறக்கி விடும் கொடுமை
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:'அண்ணா சிலை போகாது; லட்சுமி மில்ஸில் இறங்கிக்கோங்க!' - இது, கோவை - அவிநாசி ரோடு வழித்தடத்தில் அரசு பஸ்சில் வரும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் பிறப்பிக்கும் உத்தரவு. கறாராக இருக்கும் டிரைவர்களால், லட்சுமி மில்ஸ் சிக்னலில் இறக்கி விடப்படும் பயணிகள், ஆட்டோவிலோ அல்லது டவுன் பஸ்சிலோ மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கிறது.திருப்பூர் மற்றும் ஈரோட்டில் இருந்து வரும் கோவை கோட்ட அரசு பஸ்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பு கடந்து, குப்புசாமி நாயுடு மருத்துவமனை மற்றும் அண்ணாதுரை சிலை சந்திப்பு ஸ்டாப்புகளை கடந்து, பார்க் கேட் வழியாக, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.


அவிநாசி ரோட்டில் மேம்பால வேலை நடப்பதால், அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், குறித்த நேரத்துக்குள் பஸ் ஸ்டாண்ட் வர முடியாமல் டிரைவர்கள் தவிக்கின்றனர். நேரத்தை சரிக்கட்டுவதற்காக, லட்சுமி மில்ஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, பாப்பநாயக்கன்பாளையம் வழியாக காந்திபுரம் செல்கின்றனர். குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு செல்வோரை, சிக்னலில் இறக்கி விடுகின்றனர்.அண்ணா சிலை ஸ்டாப்பில் இறங்குவோரை, மகளிர் பாலிடெக்னிக் சிக்னலில் இறக்கி விடுகின்றனர். இல்லையெனில், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இறங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். நடுரோட்டில் இறக்கி விடப்படும் பயணிகள், ஆட்டோ அல்லது டவுன் பஸ்சில் ஏறி, அண்ணா சிலை ஸ்டாப்புக்கு செல்ல வேண்டியிருக்கிறது.
இதன் காரணமாக, டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே தினமும் வாய் தகராறு ஏற்படுகிறது. டைமிங் பிரச்னை ஏற்படுவதாக டிரைவர்கள் தரப்பில் கூறுகின்றனர். அதற்காக, 'எங்களை ஸ்டாப்பில் இறக்கி விடாமல், வேறொரு இடத்தில் இறங்கச் சொன்னால் எப்படி. 100 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டுமா' என, பயணிகள் வாக்குவாதம் செய்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, கண்டக்டர் மற்றும் டிரைவர்களுக்கு, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X