சில வரி செய்திகள்...மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள்
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர், உரிமைகளுக்கான சங்கத்தின் அவிநாசி ஒன்றிய மூன்றாவது மாநாடு நடந்தது. புதுப்பாளையம் சசிகுமார் தலைமை வகித்தார். கொடியை ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன் ஏற்றினார். ஒன்றிய துணை செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயபால், துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக சந்திரகலா, செயலாளராக சசிகுமார், துணை தலைவர்களாக மகாதேவி, கருப்புசாமி, துணை செயலாளர்களாக சரவணன் குமார், பழனிசாமி மற்றும், 10 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய துணை செயலாளர் மகாதேவி, நன்றி கூறினார்.நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம் தினமும் இரவு, 7:30 மணிக்கு கோவையில் புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக மறுநாள் காலை, 5:05 நாகர்கோவில் சென்று சேரும். கோவில்பட்டி - திருநெல்வேலி இடையிலான வாஞ்சி மணியாச்சி ஸ்டேஷனுக்கு இதுவரை அதிகாலை, 2:33 மணிக்கு செல்லும் ரயில், 2:35 மணிக்கு புறப்படும். இன்று முதல், இந்த ஸ்டேஷனுக்கு செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இனி, அதிகாலை, 2:48 மணிக்கு சென்று, 2.50 மணிக்கு புறப்படும். இதனால், நாகர்கோவில் சென்று சேரும் நேரத்தில் மாறுதல்கள் இருக்கும். இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிதம்பரம் திடீர் 'விசிட்'அவிநாசிக்கு திடீர் 'விசிட் செய்த காங்., மூத்த தலைவர் சிதம்பரம், கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார். காங்., மூத்த தலைவர் சிதம்பரம், திடீரென அவிநாசி வந்தார். அவிநாசி பேரூராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் வீட்டுக்கு சென்ற சிதம்பரம், அங்கு சிறிது நேரம் இருந்தார். அப்போது, விவசாயிகள் சிலர், 'தங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை; அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என்றனர். “இத்தனை ஆண்டு காலம் இலவச மின்சாரம் இல்லாமல் எப்படி விவசாயம் செய்தீர்கள்?" என அவர் கேட்க, 'தந்தை பெயரில் இருந்த நிலத்தை, தங்கள் பெயரில் மாற்றாததால் மின் இணைப்பு கிடைக்கவில்லை” என்றனர். 'பொதுவாக, ஒரு திட்டத்தை குறை சொல்லக் கூடாது; சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு கிடைக்கும்,' என, நம்பிக்கையளித்தார்.மதுக்கடை அமைக்க எதிர்ப்புதிருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், ம்.பி., சுப்பராயனிடம் அளித்த மனு: ஏ.வி.பி., பள்ளி செல்லும் வழியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழாய் பதிக்க தோண்டிய குழிகள் முறையாக மூடி ரோடு போடாமல் உள்ளது. இதனால், மாணவர்கள், பெற்றோர் அவதிப்படுகின்றனர். எனவே, ரோடு சீரமைப்பு பணி மேற்காள்ள வேண்டும். ஏ.வி.பி., பள்ளி, கொங்கு மெட்ரிக் பள்ளி செல்லும் வழியில் மதுக்கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கலெக்டருக்கு, எம்.பி., அனுப்பிய கடிதத்தில், 'இப்பகுதிகளில் ஏற்கனவே மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி அம்முயற்சி கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் முயற்சி நடக்கிறது. அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் இதனை கைவிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.'கருடா' செயலி குறித்து பயிற்சிதேர்தல் கமிஷன் மூலம், 'கருடா' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஓட்டுச் சாவடி விவரங்கள், தேர்தல் அலுவலர் குறித்த விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்த செயலி பயன்பாடு குறித்த பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் 263 ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.தேர்தல் கமிஷன் மூலம், 'கருடா' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஓட்டுச் சாவடி விவரங்கள், தேர்தல் அலுவலர் குறித்த விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்த செயலி பயன்பாடு குறித்த பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் 263 ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X