திருப்பூர்:சிறு, குறு விவசாயிகள், புதிய மின்மோட்டார் பொருத்த மானிய உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என, வேளாண் பொறியியல் துறை அழைத்துள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் வழங்கும் திட்டம் தொடர்பாக, தனி பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்கும் திட்டம், வேளாண் பொறியியல்துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள், திறன் குறைந்த பழைய மின்மோட்டார், 'பம்ப்செட்'களை மாற்றிவிட்டு, புதிய மின்மோட்டார் பொருத்திட, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மாவட்டத்தை சேர்ந்த, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் சான்று, கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள், அந்தந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு, செயற்பொறியாளர் ஜெயக்குமார் (94432 - 43495), திருப்பூர் உதவி செயற்பொறியாளர் சவுந்திராஜன் (94864 - 43437), தாராபுரம் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் (79040 - 87490), உடுமலை உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் (98654 - 97731) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.