ரூ.50 லட்சத்தில் நகர் நல மையங்கள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரூ.50 லட்சத்தில் நகர் நல மையங்கள்
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 

கோவை;கோவை மாநகராட்சியில் இரு இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், நகர் நல மையங்கள் கட்டும் பணியை, மேயர் கல்பனா நேற்று துவக்கி வைத்தார்.தெற்கு மண்டலம், கல்லாமேடு பகுதியில் ரூ.7 லட்சத்தில் போர்வெல் அமைத்தல், செல்வபுரம் முத்துசாமி காலனி, எல்.ஐ.சி., காலனி, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் ரூ.5 லட்சத்தில் மோட்டார் பழுது பார்த்தல், குழாய் மாற்றியமைத்தல், 76 மற்றும், 78வது வார்டுகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர் நல மையங்கள் கட்டும் பணிகளை, மேயர் துவக்கி வைத்தார்.துணை கமிஷனர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, நகரமைப்பு குழு தலைவர் சந்தோஷ், உதவி நிர்வாக பொறியாளர் கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X