கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்:தரிசு நிலம் தேர்வு பணி துவக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்:தரிசு நிலம் தேர்வு பணி துவக்கம்
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 

சூலூர்:ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மூன்று ஊராட்சிகளில் தரிசு நிலங்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட, 18 துறைகள் சார்பில், ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


கடந்தாண்டு, பதுவம்பள்ளி, அரசூர், உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளிலும், நடப்பாண்டில் பட்டணம், பீடம் பள்ளி, மயிலம் பட்டி ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:வேளாண் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும், ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு ஊராட்சிகளில், 320 எக்டருக்கு மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, தார்பாலின்கள், மண் வெட்டிகள், கடப்பாரைகள் வழங்கப்பட்டுள்ளன.
500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, தலா மூன்று தென்னங்கன்றுகளும், மண் வளத்தை பெருக்க சக்கை பூண்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. 100 பேருக்கு பழமரக்கன்றுகளும், மரகன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள், 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. நடப்பாண்டுக்கான கிராமங்களில் தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளன, பம்ப் செட் எவ்வளவு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X