வனத்துறையினர் மரம் ஏலம் நடத்த தி.மு.க.,வினர் எதிர்ப்பு
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மேட்டுப்பாளையம், ஜூன் 29--

மரம் ஏலம் விடுவது குறித்து விளம்பரம் செய்யவில்லை. எனவே ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த வேண்டும் என, தி.மு.க.,வினர்,வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மரம் ஏலம்
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் மட்டுமே, வனத்துறை மர டெப்போ உள்ளது. வனப்பகுதியில் இயற்கையாக விழும் மரங்கள், கடத்தி வரப்பட்ட மரங்களை, இங்கே சேமித்து வைத்து, வனத்துறை சார்பில் ஏலம் நடைபெறும்.மேட்டுப்பாளையம் மர டெப்போவில் உள்ள தேக்கு, ஈட்டி மரங்கள், 59 குவியல்களுக்கு (லாட்டுகள்), நேற்று ஏலம் நடந்தது.கோவை உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் ஏலம் நடந்தது. வனத்துறையில் பதிவு செய்த, 17 ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.

தி.மு.க., வினர் ஆவேசம்
ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென தி.மு.க.,வினர், மர டெப்போ வளாகத்தில் புகுந்து, முதல்வர் ஸ்டாலின், எந்த ஏலம் நடைபெற்றாலும், செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார். ஆனால் நீங்கள் எவ்வித விளம்பரம் செய்யாமல், ஏலம் நடத்துகிறீர்கள். எனவே இந்த ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார்," வனத்துறை சார்பில் மரங்களை ஏலம் விடுவது குறித்து, விளம்பரம் செய்ய வேண்டும் என்ற விதி இல்லை. வனத்துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் லைசன்ஸை புதுப்பித்து வருகின்றனர். அதனால் இவர்களுக்கு மட்டுமே, மரங்கள் ஏலம் விடுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். ஏலம் சம்பந்தமாக நீங்கள் புகார் தெரிவிப்பது என்றால், உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்," என்றார்.இதையடுத்து தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.

எதிர்த்தது ஏன் ?
வனத்துறையினர் மரங்களை ஏலம் விட்ட இடத்திற்கு சென்ற தி.மு.க., மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அபிபூர் ரகுமான் கூறியதாவது:மர டெப்போவில் நடந்த ஏலத்தில், மிகக் குறைவான தொகைக்கு மரங்கள் ஏலம் போயுள்ளது இதை அறிந்து வனத்துறை அதிகாரிகளிடம், மரங்கள் குறைவான தொகைக்கு, ஏலத்துக்கு போனதால், அரசுக்கு இழப்பீடு ஏற்படுகிறது.ஏலத்தில் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ஏலம் நடைபெறுவது குறித்து, செய்தித்தாளில் விளம்பரம் செய்து இருந்தால், ஏராளமானவர்கள் பங்கேற்று இருப்பர். இதனால் அதிக தொகைக்கு ஏலம் போயிருக்கும். எனவே ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்த வேண்டும் இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X