குடிபோதையில் ரகளை: எஸ்.ஐ., துாக்கியடிப்பு
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பெரம்பலுார்: குடிபோதையில் தலைமை செயலக அதிகாரியிடம் ரகளையில் ஈடுபட்ட 'சைபர் கிரைம்' எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

பெரம்பலுார் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றியவர் மனோஜ். ஜூன் 23 இரவில் பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டலுக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த தலைமை செயலக உயர் அதிகாரிகள் சிலருக்கும் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதுால் தனக்கு நெருக்கமான சிலரை அங்கு வரவழைத்து உயர் அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்.

தலைமை செயலக உயர் அதிகாரிகள் இது குறித்து தலைமை செயலகத்துக்கு தெரிவித்து அங்கிருந்து பெரம்பலுார் கலெக்டர் எஸ்.பி. கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. உடனே எஸ்.பி.யின் அலுவலக தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தலைமை செயலக உயர் அதிகாரிகளை சமாதானப்படுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சைபர் கிரைமில் எஸ்.ஐ.யாக பணியாற்றிய மனோஜ் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே பா.ம.க. வக்கீல் ஒருவரை தாக்கி ஸ்டேஷன் லாக் - அப்பில் வைத்ததாக மனித உரிமை ஆணையத்தில் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X