மகன் பிரிந்து சென்றதால் மகளுடன் தாய் தற்கொலை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
மகன் பிரிந்து சென்றதால் மகளுடன் தாய் தற்கொலை
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 

சிவகாசி:மகன் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த இளம்பெண், மகளுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி வனிதா ராணி, 36. இவரது கணவர் வேலுச்சாமி அருப்புக்கோட்டை மலைப்பட்டியில் வாட்ச்மேனாக பணிபுரிகிறார். இருவருக்கும் 15 வயது மற்றும் 13 வயது மகளும் உள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்ற கணவர் வேலுச்சாமி அவ்வப்போது விஸ்வநத்தத்திற்கு வந்து சென்றுள்ளார்.
குழந்தைகளை வனிதாராணி படிக்க வைத்தார். 10ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த இவரது மகன், பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கும்படி கூறினார். படிக்க வைக்க வசதி இல்லை என வனிதா ராணி கூறியுள்ளார். இதனால் மகன் தன் தந்தை வேலுச்சாமிக்கு மொபைல் போனில் தகவல் கூறியதால், அவர் வந்து அழைத்துச் சென்று விட்டார்.விரக்தியடைந்த வனிதா ராணி, தன் மகளுடன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X