அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 


முதுகுளத்துார், : முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. கடந்த மாதம் பிடிமண் வழங்கப்பட்டது.தினந்தோறும் இளைஞர்கள் ஒயிலாட்டம்,பெண்கள் கும்மி அடித்து வந்தனர்.முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் செய்யப்பட்டுள்ள குதிரை,தவளும் பிள்ளைகளை பஸ் ஸ்டாண்ட்,காந்தி சிலை, வழியாக கீழ்ச்சாக்குளம் கிராமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வைத்து குதிரை,தவளும் பிள்ளைகளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.கிராம மக்கள் சார்பில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X