சிவகங்கை இளைஞர் ஐ.எப்.எஸ்., ஆக தேர்வு :அகில இந்திய அளவில் 75 வது ரேங்க் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சிவகங்கை இளைஞர் ஐ.எப்.எஸ்., ஆக தேர்வு :அகில இந்திய அளவில் 75 வது ரேங்க்
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 

சிவகங்கை:சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில், 75வது 'ரேங்க்' பெற்று சிவகங்கையைச் சேர்ந்த கே.ஸ்டாலின் பிடல், ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.


சிவகங்கை மருதுபாண்டியர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் வழக்கறிஞர் குமார். அரசு பள்ளி தலைமை ஆசிரியை சண்முகசுந்தரி. இந்த தம்பதியின் மகன் கே.ஸ்டாலின் பிடல், 28.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இவருக்கு, கடந்த 17ல் நேர்முக தேர்வு நடந்தது. அதில், அகில இந்திய அளவில் 75வது ரேங்க் பெற்று ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
ஸ்டாலின் பிடல் கூறியதாவது:பள்ளிப் படிப்பை சிவகங்கையிலும், மேல்நிலை மற்றும் பி.இ., மெக்கானிக்கல் படிப்பை சென்னையிலும் முடித்தேன். 2016 முதல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத துவங்கினேன்.ஏழாவது முறையாக, 2022ல் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என்.சி.இ.ஆர்.டி., மற்றும் பாடப் புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக, தேர்வு நாளுக்கு முன்னதாக மட்டுமே படிப்பதை தவிர்ப்பதுடன், தினமும் சில மணி நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். 'தினமலர்' நாளிதழ் மற்றும் பொது அறிவு வினா புத்தகம் என அனைத்தையும் முழுமையாக படித்து மனதில் நிறுத்த வேண்டும். அது தான் தேர்வை எளிதாக்க கைகொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கே.ஸ்டாலின்பிடல்

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X