ராமநாதபுரம் குடிநீர் பிரச்னையை தீர்க்க திட்டம்; காவிரியில் ரூ.500 கோடியில் புதிய கிணறு  | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராமநாதபுரம் குடிநீர் பிரச்னையை தீர்க்க திட்டம்; காவிரியில் ரூ.500 கோடியில் புதிய கிணறு 
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய காவிரி குடிநீர் ஆண்டுதோறும் குறைவாக வழங்கப்படுகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை அதிகளவில் உள்ளது. இதனையடுத்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க திருச்சி காவிரியில் புதிய கிணறு, குழாய்கள் மாற்ற ரூ.500 கோடிக்கு குடிநீர் வடிகால் வாரியத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில 2009ம் ஆண்டில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ. 616 கோடி மதிப்பில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 2,306 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊரக பகுதிகளுக்கு 17.18 லட்சம் லிட்டர், பேரூராட்சி பகுதிகளுக்கு 4 லட்சம் லிட்டம், நகராட்சி பகுதிகளுக்கு 14.82 லட்சம் லிட்டர் அளவிலும் குடிநீர் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. இதுபோக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் கிராமங்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இருப்பினும் மாவட்டத்தில் போதிய மழையின்மை, பெயரளவில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் பராமரிப்பு பணி, ஊரணி, கண்மாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோடைகாலம் மட்டுமின்றி பொதுவாக மாவட்டத்தில் அனைத்து நாட்களிலும் மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலையவேண்டியுள்ளது. குறிப்பாக தற்போது நகர், புறநகர் பகுதிகளில் வழக்கத்தை விட 10 லட்சம் லிட்டர் வரை குடிநீர் குறைவாக வழங்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண திருச்சி காவிரியில் ஐந்தாவது ஆக புதிய கிணறு அமைத்து, குழாய்கள் புதிதாக மாற்ற ரூ.500 கோடி செலவில் திட்டம் உள்ளது. இது இந்தாண்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறினர்.------------


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X