சிவகங்கையில் சிக்கிய ரூ.2.5 லட்சம் குட்கா:கன்டெய்னர் லாரியில் கடத்திய மூவர் கைது | சிவகங்கை செய்திகள் | Dinamalar
சிவகங்கையில் சிக்கிய ரூ.2.5 லட்சம் குட்கா:கன்டெய்னர் லாரியில் கடத்திய மூவர் கைது
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
Latest district News

சிவகங்கை:பெங்களூரூவில் இருந்து சிவகங்கை மாவட்டம் ஒக்கூருக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த ரூ.2.5 லட்சம் குட்கா, கூல் லீப், மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பெங்களூரூ அருகே பன்னார்கட்டாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லீப் போன்ற போதை வஸ்துகளை கடத்தி விற்பதாக தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்கிற்கு புகார் சென்றது. தனிப்படையினர் எஸ்.ஐ., கணேஷ் பாபு தலைமையில் நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரூவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்தனர்.
சிவகங்கை ஒக்கூரில் சூப்பர் மார்க்கெட் அருகே இறக்க முயன்றபோது, கன்டெய்னர் லாரியில் சோதனை நடத்தினர்.லாரியில் வீட்டு உபயோக பொருட்களுக்கு இடையே சாக்கு மூடையில் குட்கா, கூல் லீப் மற்றும் வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன. போலீசார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., காத்தமுத்து கன்டெய்னர் லாரி, 2 கார்களை பறிமுதல் செய்தனர். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஆரோக்கியம் மகன் தேவதாஸ் 34, லாரி டிரைவர் பெங்களூரு அழகேசன் 26, லோடுமேன் ஒக்கூர் ராமநாதன் 21, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய சிவகங்கை தினேஷ் 27, என்பவரை தேடிவருகின்றனர்.
விசாரணையில் பெங்களூரூவில் இருந்து கன்டெய்னர் லாரியில் அடிக்கடி போதை பொருட்களை கடத்தி வந்து ஒக்கூர் சூப்பர் மார்க்கெட் கோடவுனில் வைத்து, கார்களில் தென்மாவட்டங்களில் விற்பனை செய்தது தெரிந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X