புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, இளம் பெண்ணிடம் செயினை பறித்து தப்பிச் சென்ற திருடனை பிடிக்க முயன்றவர், பைக் மோதி இறந்தார்.
தப்பினார்
துலுக்கம்பட்டி பிரிவு அருகே வந்த போது, பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ரேகாவை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த, 8 சவரன் செயினை பறித்து தப்பினார்.
உடனே, இது பற்றி மொபைல் போன் மூலம், துலுக்கம்பட்டியில் உள்ள உறவினர்களுக்கு அந்த பெண் தகவல் தெரிவித்தார்.அங்கிருந்தவர்கள், செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடிப்பதற்காக, துலுக்கம்பட்டி பகுதியில் காத்திருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த செயின் பறிப்பு திருடனை, மக்கள் சுற்றி வளைத்ததும் அதிர்ச்சியடைந்த திருடன், பைக்குடன் தப்பி ஓட முயன்றான்.
மோதினார்
திருடனை பிடிப்பதற்காக, சாலையின் குறுக்கே, தன் 'டூ - வீலரை' நிறுத்தி நின்று கொண்டிருந்த முத்துக்குமார், 43, என்பவர் மீது செயின் பறிப்பு திருடன் பைக்குடன் மோதினார்.விழுந்த திருடனை, பொது மக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அப்போது, சேதுராப்பட்டியை சேர்ந்த சின்னராஜ், 23, என்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார், பைக் மோதியதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் மற்றும் பொதுமக்களின் தாக்குதலால் காயமடைந்த சின்னராஜை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் இறந்தார். செயின் பறிப்பு குற்றவாளி சின்னராஜை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.