மானாமதுரை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் நாகரிகமற்றவராக நடந்து மைக்கை கடித்து குதறுகிறார்'' என, அமைச்சர் பெரியகருப்பன் மானாமதுரை பொதுக் கூட்டத்தில் பேசினார்.
வீதிகளில் பேசக்கூடியவர்கள் போல அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். அ.தி.மு.க.,வினருக்கு நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலை இல்லை. அவர்களுடைய எண்ணமெல்லாம் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து நாட்டை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதுதான்,என்றார்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசி, மதியரசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.