டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தல்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:டெங்கு காய்ச்சல் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாநிலம் முழுதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகம் பெருக்கம் அடைகின்றன. இந்த வகை கொசுக்களால், இந்தாண்டில் மே வரை 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கொரோனா, மற்றொருபுறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில், பொது சுகாதாரத்துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. அடுத்து வரும் மாதங்களில் மழை பொழிவு இருக்கும் என்பதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதன்படி, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில், டெங்கு பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதுகுறித்த விபரங்களை தெரிவிப்பது அவசியம்.நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும்.
வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லுாரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும், தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு, பொதுமக்களை அறிவுறுத்துவது முக்கியம். மேலும், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து வினியோகித்தல், நிலவேம்பு குடிநீர் வினியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X