நவி மும்பை தமிழ் சங்கத்துக்குரூ.50 லட்சம் அரசு நிதி உதவி | சென்னை செய்திகள் | Dinamalar
நவி மும்பை தமிழ் சங்கத்துக்குரூ.50 லட்சம் அரசு நிதி உதவி
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

சென்னை:நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு, தமிழக அரசு சார்பில், முதல்வர் ஸ்டாலின் 50 லட்சம் ரூபாய் வழங்கினார்.


தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு, தமிழக அரசு சார்பில், 2021 டிச., 10ல், 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.அதன்பின் கட்டடப் பணிகளை முடித்திட, கூடுதல் தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், சங்க அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுவரை, நவிமும்பை தமிழ் சங்க கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக, தமிழக அரசு சார்பில், 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குனர் அருள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X