முதுமலையில்உண்ணி செடிகள் அகற்றம் | சென்னை செய்திகள் | Dinamalar
முதுமலையில்உண்ணி செடிகள் அகற்றம்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

சென்னை:'வனப்பகுதிகளில் அன்னிய களை தாவரங்கள் அகற்றும் திட்டத்தின்படி, முதுமலை வனப்பகுதியில், 50 ஏக்கர் அளவுக்கு உண்ணி செடிகள் அகற்றப்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம், முதுமலை வனப் பகுதிகளில், லந்தானா எனப்படும் உண்ணி செடிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டதில், 50 ஏக்கர் பரப்பளவில் உண்ணி செடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து, அங்கு இயல்பான வகை புற்கள் வளர துவங்கியுள்ளன. தொடர்ந்து, இப் பகுதியில் உண்ணி செடிகள் வளாமல் இருப்பதற்கான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.வனப்பகுதிகளில் அன்னிய களை தாவரங்களை அகற்றும் திட்டம் பிற வனவிலங்கு காப்பகங்கள், தேசிய பூங்காக்களிலும் விரிவாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X