விஷ வாயு தாக்கி வாலிபர் பலிஒப்பந்ததாரர் உட்பட இருவர் கைது
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் பணியில், விஷ வாயு தாக்கி வாலிபர் பலியான வழக்கில், ஒப்பந்ததாரர் உட்பட இருவர் கைதாகினர்.


சென்னை மாதவரம் மண்டலம், முத்துமாரியம்மன் கோவில் தெருவிலுள்ள அம்மா உணவகம் எதிரில், நேற்று முன்தினம் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணி நடந்தது.சென்னை குடிநீர் வாரியத்தின் ஏற்பாட்டில், தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக நடந்த பணியில், தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிகுமார், 40; மற்றும் நெல்சன், 26, ஆகியோர் ஈடுபட்டனர்.
மாலை, 3:30 மணியளவில், அவர்கள் பயன்படுத்திய இயந்திரம் பழுதானதால், ஒருவர் பின் ஒருவராக, இருவரும் உள்ளே இறங்கினர். அப்போது விஷ வாயு தாக்கி, மயங்கி உள்ளே விழுந்தனர்.தகவல் அறிந்த மாதவரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவர்களை மீட்டனர். ஆம்புலன்ஸ் வாயிலாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், நெல்சன் உயிரிழந்தார். ரவிகுமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், மாதவரம், திரு.வி.க., ஒன்றாவது தெருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பிரகாஷ், 53; அதே பகுதி உடையார் தோட்டத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர் வினிஸ், 33, ஆகியோரை, நேற்று காலை கைது செய்தனர்.போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி, பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவானது.
இந்த விபத்தில் பலியான நெல்சனின் குடும்பத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவால், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வாயிலாக, 15 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X