ரசாயனத்தால் பழுக்க வைத்த 7,000 கிலோ மாம்பழம் பறிமுதல் | சென்னை செய்திகள் | Dinamalar
ரசாயனத்தால் பழுக்க வைத்த 7,000 கிலோ மாம்பழம் பறிமுதல்
Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 

சென்னை:கோயம்பேடு சந்தையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட 7,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னை கோயம்பேடு சந்தையில், ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு கனி சந்தையில் மாம்பழ விற்பனையகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனத்தை கலந்து, மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, ஆறு கடைகளில் இருந்து, 7,000 கிலோ மாம்பழங்கள் மற்றும் 1,000 கிலோ வாழைப் பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X