பறித்தது கவரிங் நகை: விபத்தால் அழிவு பாதை
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

குனியமுத்தூர்--கோவைபுதூர் அருகேயுள்ள குளத்துப்பாளையம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார்; மனைவி தங்கமணி, 34, இரு நாட்களுக்கு முன் இரவு பேரூர் ரோட்டில், பின் தொடர்ந்து பைக்கில் வந்த இருவரில் ஒருவர், தங்கமணி கழுத்திலிருந்த கவரிங் நகையை பறித்தார்.

இருவரும் பைக்கில் தப்பி பாரதி நகர் சந்திப்பில் செல்லும்போது, எதிரே வந்த பைக்கில் மோதினர்.இதில் பைக்கில் வந்த ஒரு பெண் மற்றும் ஆண் தூக்கி வீசப்பட்டு, மற்றொரு வாகனத்தில் மோதினர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதனிடையே, நகையை பறித்து வந்த இருவரில் ஒருவருக்கும் காயமேற்பட்டது. மற்றொருவர் தப்பினார்.

காயமடைந்தவரை மக்கள் பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், காயமடைந்தது கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன், 21 என்பதும், தப்பியது மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராமனாதன் எனவும் தெரியவந்தது. ஹரிஹரன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.காயமடைந்த பெண் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் தன்யாஸ்ரீ, 20; உடன் வந்தது அறிவழகன் எனவும் தெரிந்தது. குனியமுத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X