கோவை-கோயமுத்துார் உற்பத்தி திறன் குழுவின், 64வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம், இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில், நேற்று முன் தினம் நடந்தது. இதில் 2022-23 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக அருள், துணைத்தலைவர்களாக சுதாகர் மற்றும் சித்ரா, செயலாளராக சீனிவாசன், பொருளாளராக ஸ்ரீபிரியா, இணைசெயலாளராக வேலுமணி ஆகியோரும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நரேந்திரன், ஜோஷ்வாசெல்வகுமார், பேராசிரியர் கருப்பசாமி, ராமானுஜம், பாலசுந்தரம், பழனிச்சாமி, மனோகரன், மிதுன்ராமதாஸ், சசிகுமார், புவனேஷ்வரன், டாக்டர் குருசெல்வராஜ், மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.