கல்லூரி கட்டுமானப் பணியை துவங்கிட கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கல்லூரி கட்டுமானப் பணியை துவங்கிட கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரி கட்டுமான பணிகளை துவங்கிட வேண்டும் என எம்.எல்.ஏ., தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.



செந்தில்குமார் எம்.எல்.ஏ.,தலைமையில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், ஒன்றியசெயலாளர் தேவேந்திரன், நகர மன்ற கவுன்சிலர் முருகன், குட்டி ஆகியோர் கலெக்டர் ஸ்ரீதரிடம் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு சொந்தமான இடம் மற்றும்கட்டடம் மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, கலை, அறிவியல் கல்லுாரிகட்டுவதற்காக சடையம்பட்டு பகுதியில்புதிதாக இடம் தேர்வு செய்து, கட்டுமானப் பணிகளுக்காக 11.25கோடி ரூபாய் நிதியை முன்னாள் முதல்வர் பழனிசாமி கடந்த 2020ம் ஆண்டு ஒதுக்கீடு செய்திருந்தார்.

ஆனால் ஓராண்டு கடந்தும் அங்கு கட்டுமானப்பணிகள் எதுவும் துவங்கப்படாமல் உள்ளது. இதனால் அரசுகல்லுாரி மாணவர்கள் கனியாமூரில் ஒரு தனியார் பள்ளி கட்டடத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.போதியஇட வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசுகலை அறிவியல் கல்லுாரிக்கான கட்டட பணிகளை துவங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X