32 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள் ஆரத்தழுவி உருக்கம்! | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
32 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள் ஆரத்தழுவி உருக்கம்!
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
Latest district News

போத்தனூர் -கோவை டவுன்ஹால் அருகே சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1988 -- 1990ம் ஆண்டுகளில் தமிழ் வழியில் பிளஸ் 1, பிளஸ் 2 (அறிவியல் பிரிவு) பயின்ற மாணவர்களின் சந்திப்பு, நவக்கரை அருகே நடந்தது.32 ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவியும், கைகுலுக்கியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து ஒவ்வொருவராக பள்ளி படிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்தனர். கல்லூரி படிப்பு, பணி, குடும்ப விபரங்களை பகிர்ந்துகொண்டனர்.இதையடுத்து கிரிக்கெட், வாலிபால் விளையாடியும், நீச்சலடித்தும் தங்கள் இளமை காலத்தை மீண்டும் புதுப்பித்துக்கொண்டனர். அனைவரும் குழு புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.இதில் முன்னாள் மாணவரும். பொள்ளாச்சி பி.ஏ., கல்வியியல் கல்லூரி முதல்வருமான செந்தில்குமார், பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் பி.செந்தில்குமார், மிண்டா நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ், தொழில்முனைவோர் இளங்கோ, ராஜேஸ்குமார், முகமது மசூத், கலிங்கேஸ்வரன், வெங்கிடுசாமி, க.சுரேஷ் என பலரும் பங்கேற்றனர். மோகன்ராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X