வேலுமணியை துரத்தும் லஞ்ச ஒழிப்பு துறை: அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் தொடர் விசாரணை
Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நல்லறம் அறக்கட்டளை, கோவையில் நடத்தி வரும் அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி, வங்கி பரிவர்த்தனை நகல்களை பெற்றுச் சென்றனர்.



latest tamil news



கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, கோவையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்திடம், 2018ல் வலியுறுத்தினார். அப்போது, ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் செயல்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருந்தது. அவ்வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

ஆலயம் வெல்பேர் டிரஸ்ட், சாந்தி சோசியல் சர்வீஸ், கான்ட்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகிய அமைப்புகள் விருப்ப கடிதம் வழங்கின. தகுதியை ஆய்வு செய்து, ஆலயம் அறக்கட்டளையுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. மாத வாடகையாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின், ஆலயம் அறக்கட்டளையும், முன்னாள் அமைச்சர் வேலுமணி சகோதரர் அன்பரசன் நடத்தும் நல்லறம் அறக்கட்டளையும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

கடந்த, 2019 பிப்., 3ல் இம்மையம் செயல்பட துவங்கியது. மாணவ மாணவியருக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு படித்த இரு மாணவர்கள், சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் ரேங்க் பெற்றிருந்தனர்.






இச்சூழலில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கோவையில் செயல்படும் அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமிக்கு சென்று, கடந்த இரு நாட்களாக விசாரித்தனர். பயிற்சி பெறும் மாணவ மாணவியர் பட்டியல், கற்றுத்தரும் பேராசிரியர்கள் யார் யார், வினாத்தாள் நகல்கள் மற்றும் அகாடமி துவங்கியதில் இருந்து இன்று வரை வங்கி பரிவர்த்தனை நகல் ஆகியவற்றை பெற்றுள்ளனர்.

அகாடமியின் வரவு - செலவு விபரங்கள் மற்றும் மாநகராட்சிக்கும், நல்லறம் அறக்கட்டளைக்கும் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்த விபரங்களை சேகரித்து சென்றுள்ளனர். இது, வேலுமணி மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.



காரணம் என்ன?



வேலுமணி அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை தனது சகோதரர் நடத்தும் மையத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இத்தகைய விசாரணை லஞ்ச ஒழிப்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நல்லறம் அறக்கட்டளை சேர்மன் அன்பரசனிடம் கேட்டதற்கு, ''அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கிறோம். மையத்தின் செயல்பாடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்துச் சென்றுள்ளனர்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-ஜூன்-202213:17:09 IST Report Abuse
Ramesh Sargam எவ்வளவு நாட்கள்தான் இந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை துரத்திட்டு இருப்பாங்க. என்று அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு என்று தண்டனை வாங்கி கொடுப்பார்கள் இந்த லஞ்ச ஒழிப்பு துறையினர்? இந்த கலியுகத்தில் அது நடக்குமா?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-ஜூன்-202210:51:18 IST Report Abuse
raja ... முடியாது இந்த திருட்டு திராவிட கேடுகெட்ட விடியாத அரசால்.........
Rate this:
Cancel
செந்தில்குமார் திருப்பூர் இவரை உள்ள தூக்கி போட்டால் எடப்பாடியின் ஆட்டம் அடங்கிவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X