போலீஸ் செய்திகள். | விருதுநகர் செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்.
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 



வாலிபருக்கு அடி

சிவகாசி: சிவகாசி மீனம்பட்டி வடக்கூரைச் சேர்ந்தவர் நாகராஜ் 23. அவரை முன் விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், ஈஸ்வரன் , அடித்து, முள்வேலியில் தள்ளி விட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பறிமுதல்சிவகாசி: பேராபட்டியில் அதே பகுதியை சேர்ந்த வெயில்முத்து 55, ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 100 குரோஸ் அடங்கிய வெள்ளை திரி, முழுமையாக தயாரிக்கப்பட்ட ரெயின்போ கலர் ஸ்மோக் வெடி வைத்திருந்தார். பட்டாசுகளை பறிமுதல் செய்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டாசு தயாரிப்பு: மூவர் மீது வழக்கு

சிவகாசி: எம்.புதுப்பட்டி சாணார்பட்டியில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான செல்வம் முனீஸ்வரி பயர் ஒர்க்ஸ் உள்ளது. இதனை அமீத் என்பவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார். இவர்களின் உத்தரவுப்படி சந்திரசேகர் தலைமையில் அனுமதியின்றி, 18 பேர் இரவில் தடை செய்யப்பட்ட சரவெடி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைசிவகாசி: ரிசர்வ்லைன் சிலோன் காலனியை சேர்ந்தவர் ஞானசேகர் 42. இவருக்கு மது பழக்கத்தால் ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவியும், இளைய மகளும் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பட்டாசு தயாரிப்பு: இருவர் கைதுசாத்துார்: தாயில்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர்கள் புவனேஸ்வரன், 44. கார்த்தீஸ்வரி, 39. வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், பாதி தயாரித்த நிலையில் இருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X