முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்ற கலெக்டர் உத்தரவு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்ற கலெக்டர் உத்தரவு
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 



ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவாமல்தடுப்பதற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல்முகக்கவசம் அணிதல் போன்ற அரசு அறிவித்துள்ள கொரோனாதடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால்நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும்.உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆரம்பசுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுகி கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.--------

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X