இயற்கை உரங்கள் தயாரிக்கும் பணி ஜரூர்! வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பெண்ணாடம் : பெண்ணாடம் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாகநடக்கிறது. உரங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வார்டுகளில் அள்ளப்படும் மக்கும், மக்கா குப்பைகளை சிலுப்பனுார் சாலை பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதுடன் விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 2013ல் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட நிதியில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆற்றங்கரையோரம் வள மீட்பு பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமான பணிகள் பாதியில் நின்றது. பின்னர், 2015ல் பேரூராட்சி பொது நிதியில் இருந்து கூடுதலாக 81 லட்சம் ரூபாய் பெற்று மீண்டும் வள மீட்பு பூங்கா கட்டுமான பணி துவங்கி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது.

தற்போது வள மீட்பு பூங்காவிற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஆண், பெண் பணியாளர்கள், நிரந்தர பணியாளர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு, மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம், மண்புழு உரம், மண்புழு குளிர் நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும் இயற்கை உரங்களை நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், தோட்டப் பயிர்களான காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளும் செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மண்புழு குளிர் நீரை வாங்கிச் செல்கின்றனர்.

உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் மாதத்திற்கு 200 கிலோவில் இருந்து 500 கிலோ வரை விற்கப்படுகிறது. மேலும், வளமீட்பு பூங்கா வளாகத்தில் வளர்க்கப்படும் முயல், வாத்து மற்றும் காய்கறி, பூ செடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'வளமீட்பு பூங்காவில் மாதத்திற்கு 500 கிலோ வரை உரங்கள் உற்பத்தியாகிறது. அதில் மண் புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம் கிலோ 20, மண் புழு குளிர் நீர் லிட்டர் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.இயற்கை உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X