உயர் மின் அழுத்த டவரின் கீழ் நகராட்சி பூங்காரூ. பல லட்சம் செலவழித்தும் வீணாகும் நிலை
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் உயர்மின் அழுத்த டவர் உள்ள இடத்தில் நகராட்சி பூங்காவை அமைத்துள்ளனர். இதனால் மின்சார வசதி செய்யப்படாமல் உள்ளதால் பல லட்சம் செலவழித்து வீணாகி வருகிறது. இதனால் வேறு இடத்தில் பூங்கா அமைக்க மக்கள் வலியுறுத்திகின்றனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு கணேஷ் நகர் அருகில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூங்கா அமைக்கும் பணி நடந்தது.

பூங்காவிற்கு அருகில், மின்வாரிய உயர் மின்னழுத்த டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவரை சுற்றி, நகராட்சியினர் பூங்காவிற்கான காம்பவுண்ட் சுவற்றை எழுப்பியுள்ளனர்.பின்னர், பூங்காவிற்கு மின் இணைப்பு கேட்டு மின் வாரியத்தில் நகராட்சியினர் மனு செய்துள்ளனர். பூங்கா இருக்கும் பகுதியில், உயர் மின் அழுத்த டவர் இருப்பதால், மின் இணைப்பு தர, மின் வாரியத்தினர் மறுத்துவிட்டனர்.மேலும், அந்த பகுதியில் பூங்கா அமைக்க கூடாது எனவும், அறிவுறுத்தியுள்ளனர்.இதனால், லட்சக்கணக்கில் நிதி செலவழிக்கப்பட்டும் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும், பூங்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X