தேவிபட்டினம், : கடந்த சில வாரங்களாக சுட்டெரித்து வரும் கடும் வெயிலால், கடலோரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.கிழக்கு கடற்கரை பகுதியிலான, தேவிபட்டினம், கோப்பேரிமடம், சம்பை, திருப்பாலைக்குடி, வாலிநோக்கம், நதிபாலம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், அதிகளவில், உப்பள பாத்திகள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக இப்பகுதிகளில், கடும் வெயில் சுட்டெரித்து வருவதால், உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.பாத்திகளில் படிந்துள்ள அதிகப்படியான உப்பை, தொழிலாளர்கள் அப்பகுதியில் குவியல், குவியலாக, குவித்து வைத்துள்ளனர்.
குவித்து வைக்கப்பட்டுள்ள உப்பு தரம் பிரித்து, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.