ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக ரூ.3 கோடி செலவில் உண்டு உறைவிட பள்ளி தொடங்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசு அனுமதியுடன் 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ரூ.3கோடி செலவில் உண்டு உறைவிட பள்ளி தொடங்க மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக மாவட்ட கல்வித்துறை வருவாய்துறையினர் இடம் ஒதுக்கீடுசெய்துதர கலெக்டரிடம் விண்ணப்பிக்க உள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் இந்தாண்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன.இந்த பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை, எளிய பிளஸ் 1, 2 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், 'நீட்' தேர்வு மூலம் மருத்துக்கல்லுாரியில் சேருவதற்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே தனியார் மூலம் தங்கும் வசதி, உணவு வசதியுடன் உண்டு, உறைவிட பள்ளிகள் இரண்டு உள்ளன. தற்போது தான் அரசு சார்பில் உண்டு உறைவிட பள்ளி முதல் முதலாக தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் வெளியூர் மாணவர்கள், ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.------------